சன் டிவி 'வம்சம்' தொடரால் பீதி- வைகோ பிரசாரம் குறித்து மதிமுகவினருக்கு எச்சரிக்கை!!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் இடம்பெற்ற ஒரு காட்சியால் மதிமுகவினர் பீதியடைந்துள்ள போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பிரசாரம் தொடர்பாக 9 கட்டளைகளை அக்கட்சி பிறப்பித்துள்ளது.
சன் டிவியில் நடிகர் விஜயகுமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கும் வம்சம் தொடர் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் விஜயகுமாருக்கு வில்லியாக நடிகை வடிவுக்கரசி நடித்து வருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்ற வளாகத்தில் வடிவுக்கரசி போட்டுக் கொடுத்த சதியின் படி அவரது அடியாள் ஒருவர் நடிகர் விஜயகுமாரிட கை குலுக்குகிறேன் என்ற பெயரில் விஷம் தடவிய நீண்ட நகங்களை வைத்து கீறிவிடுவார்.

இதனால் விஷம் உடலுக்குள் பாய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டிருப்பார். இப்படித்தான் போகிறது வம்சம் தொடர் காட்சிகள்.
எங்கே வம்சத்தில் செய்தது போல வைகோவையும் யாரும் இப்படி செய்துவிடுவார்களோ என பீதியடைந்து போய் மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தலைவரோடு (வைகோவுடன்) கை குலுக்க முனைபவர்களைத் தவிர்க்க வேண்டும். நீளமான நகங்களை வளர்த்துக் கொண்டு கையைப் பற்றி இழுக்க முனைபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சி தொண்டர்களுக்கு மதிமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள 9 கட்டளைகள் விவரம்:
வைகோவின் தேர்தல் பரப்புரைப் பயணங்கள், தங்கு தடை இன்றி வெற்றிகரமாக அமைந்திட, கழகத் தோழர்கள் கவனிக்க வேண்டியவை:
1. எந்த இடத்திலும் மேடை அமைத்தல் கூடாது.
2. பொதுச்செயலாளருடைய பிரச்சார வண்டி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நின்று பேசுகின்ற வகையில் இடத்தைத் தேர்ந்து எடுக்க வேண்டும். தலைவர் வந்தவுடன் வேறு எந்த இடையூறுகளும் இன்றி, நேரடியாகப் பேசுகின்ற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. போக்குவரத்தைத் தடுக்கக் கூடாது.
4. தலைவருடைய பிரச்சார வண்டிக்குள் ஏற முனைவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கூட்டத்தினர் வேனுக்கு அருகே நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதைத் தவிர்த்து, சற்றே இடைவெளி இருக்கின்ற வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. பொதுச்செயலாளருடைய வண்டிக்கு முன்பு, வழிகாட்டி வாகனம் மட்டுமே செல்ல வேண்டும். தொடர்ச்சியாக ஒலி எழுப்பக் கூடாது. எண்ணற்ற இரண்டு சக்கர வாகனங்கள், அணிவகுப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடும். அடுத்தடுத்த இடங்களில் பேசுகின்ற நேரத்தைக் குறைத்து விடும். மேலும், வேகமாகச் செல்லும்போது விபத்துகள் நேர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.
6. வீண் செலவு செய்து ஆரவாரமான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தல் கூடாது. குறிப்பாக பட்டாசுகள் வெடிப்பது அறவே கூடாது.
7. சால்வைகள், பூங்கொத்துகள் அளிப்பதையும், மலர்க்கிரீடங்கள் சூட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அந்தத் தொகையைத் தேர்தல் நிதியாக வழங்குவதே, இக்காலகட்டத்தின் தேவை.
8. தலைவரோடு கை குலுக்க முனைபவர்களைத் தவிர்க்க வேண்டும். நீளமான நகங்களை வளர்த்துக் கொண்டு கையைப் பற்றி இழுக்க முனைபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
9. பொதுச்செயலாளர் பேசும்போது, அனைத்து நிர்வாகிகளின் பெயர்களையும் சொல்வது சிரமம். நேரத்தின் அருமை கருதி கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு நிர்வாகி என்ற அளவில் தெரிவு செய்து, அவர்களுடைய பெயர்களைப் பெரிய எழுத்துகளில் தெளிவாக எழுதி ஆயத்தமாக வைத்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எப்படியெல்லாம் பீதியாக்குகிறார்கள்!!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications