அம்மாவின் குல விளக்கே, ஆளப் பிறந்தவளே.. தீபாவுக்கு தென் மாவட்டங்களிலும் வலுக்கும் ஆதரவு
ஜெயலலிதா அண்ணன் மகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் விளம்பர பலகை வைத்து வருவது அக்கட்சிக்குள் ஒரு பிரிவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தென்காசி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் மத்தியில் யார் கட்சியை வழிநடத்துவார் என்ற கேள்வி சாதாரண தொண்டர்கள் முதல் அதிமுகவின் அனுதாபிகள் வரை எழத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் பொது செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வரவேண்டுமென்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஆங்காங்கே இதற்க்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் அவரே கட்சியை நடத்த வேண்டும் என்றும் அதிமுகவினர் விளம்பர பலகைகளை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் நெல்லை மாவட்டம் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவுகள் பெருகிவருகின்றன.

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் காவல்துறையின் அனுமதியோடு பேருந்து நிலையம் முன்பு தீபாவை ஆதரித்து அதிமுக பிரமுகர்கள் 2இடங்களில் விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.இதுக்கு போட்டியாக சில அதிமுகவினர் சசிகலா விளம்பர பலகையையும் வைத்துள்ளனர்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன்,மாவட்ட செயலாளரும்,நெல்லை மக்களவை உறுப்பினருமான பிரபாகரன் ஆகியோரின் சொந்த ஊரான பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் தீபாவிற்கு ஆதரவாக விளம்பர பலகைகளை வைத்துள்ளது சில அதிமுகவினர் மத்தியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications