ஏற்காடு இடைத் தேர்தலுக்கான திமுக ஆலோசனைக் கூட்டம்.. அழகிரி ஆதரவாளர்கள் 'ஆப்சென்ட்'!

ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க பணியாற்றுவது தொடர்பாக இன்று மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
மாவட்டச் செயலாளரான மூர்த்தி இதற்குத் தலைமை தாங்கினார். முன்பு இவர் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டில் அவர் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் யாரும் வராமல் புறக்கணித்து விட்டனர்.
மதுரையில் நடைபெறும் திமுக கட்சிக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதில்லை என்று கட்சித் தலைமையிடம் அழகிரியே முறையிட்டதாக முன்பு செய்திகள் வந்தன. மேலும் அவர் சமீப காலமாக கட்சிக் கூட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறார். இந்த பின்னணியில்தான் இன்றைய கூட்டத்தை அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
இன்றைய கூட்டத்தில், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், மு.க.அழகிரி தலைமையில் தென் மாவட்டங்களில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக திருமங்கலம் தொகுதியில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து திருமங்கலம் பார்முலா என்றே அதற்கு பெயரும் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications