காவிரி: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது- முத்தரசன் குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு துரோகம் செய்ய முடிவெடுத்து தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, மீண்டும் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்க மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றமும் தொடர்ந்து துணை போகிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே காவிரி விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு வருவது தமிழக விவசாயிகளின் மீதும், மக்களின் மீதும் அரசின் பாராமுகத்தையே காட்டுகிறது.
கடந்த மே 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் கொடுக்க உத்தரவிட்டதை கர்நாடகம் மறுத்துவிட்டது. ஆனால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் இந்த முறை எந்தக் கேள்வியும் எழுப்பாதது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு, உச்சநீதிமன்றம் , மாநில அரசு மூன்றும் நாடகம் ஆடுகின்றன. எனவே, அரசியல் கடந்த மக்கள் போராட்டங்களின் மூலமே இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications