மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது மர்ம விமானம் பறந்ததா?
நெல்லை: நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது மர்ம விமானம் பறந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு வட்டத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் அருகே வெளி ஆட்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மையத்தின் சுற்றுப் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மலைப்பகுதியின் மேலே சிறிய விமானம் ஓன்று பறந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியை 3 முறை வட்டமடித்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்திலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிறகு அது தூத்துக்குடியை நோக்கி பறந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி பொதுமக்கள் பலரும் மகேந்திரகிரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினரும், பனகுடி போலீசாரும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள வனப்பகுதியில் சூறவாளி ஊத்து என்ற பகுதி வரை சென்று சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக மகேந்திரகிரி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, விமானங்களை கண்காணிக்க கூடிய ரேடார் போன்ற வசதிகள் எங்களிடம் இல்லை. அதனால் ஆராய்ச்சி மையத்தின் மேல்பகுதியில் மர்ம விமானம் பறந்ததா என்று தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
மர்ம விமானம் பறந்ததை விட இந்தப் பதில்தான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கண்காணிப்பு ரேடாரோ, பிற கருவிகளோ பொருத்தப்படாதது மக்களை அதிர வைத்துள்ளது.
ராக்கெட் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் குறித்த ஆய்வுகள் மகேந்திரகிரி மையத்தில் முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய ராக்கெட்களி்ல் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்கள் இங்குதான் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்து இன்னொரு ஏவுதளத்தை மகேந்திரகிரியில் நிர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது. அந்த அளவுக்கு முக்கியமானது இந்த மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications