பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரம்: எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது?
பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாகப் பேசிய எஸ்.வி சேகர்- வீடியோ
சென்னை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

இதுகுறித்து எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளித்த பத்திரிக்கையாளர்கள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய புகாரில் எஸ்விசேகர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள எஸ்வி சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே எஸ்வி சேகரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் இன்றும் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications