இறங்கிப் போங்க... இல்லையெனில் ஸ்டாலின் - தினகரன் அரசுதான்: எடப்பாடிக்கு சு.சுவாமி அட்வைஸ்

தினகரனுடன் இணைந்து செயல்படுங்கள்... இல்லையெனில் ஸ்டாலின்- தினகரன் அரசு அமையும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பான்மை இல்லாத நிலையில் தினகரனுடன் இணைந்து செயல்படுங்கள்; இல்லையெனில் ஸ்டாலின் - தினகரன் அரசு அமையும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்- அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலர் தினகரன் இணைந்து விரைவில் கூட்டணி அரசு அமைப்பர் என சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடியார் சென்னைக்கு வரவழைத்துள்ளார்.

Swamy advices to EPS to unite with Dinakaran

சென்னையில் மாவட்டங்களின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போதைய நிலையில் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருக்கிறார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு ஈபிஎஸ் அழைப்பு விடுத்திருக்கிறார். பெரும்பான்மை இல்லையெனில் தினகரனிடம் தெரிவியுங்கள்; அவர் இணைய தயாராக இருக்கிறார் என்பதுதான் முதல்வர் எடப்பாடிக்கான என்னுடைய அட்வைஸ். அப்படி செய்யவில்லையெனில் ஸ்டாலின் - தினகரன் அரசுதான் என குறிப்பிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

தொடர்ச்சியாக சுப்பிரமணியன் சுவாமி, ஸ்டாலின் - தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+