"அரைவேக்காட்டுத்தனமாக" பேசும் வைகோ- மதிமுகவையும் தடை செய்வேன்: சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல்!
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருவதாகவும் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டி விவரம்:
ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டேன். இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை என்றைக்கும் ஏற்க முடியாது.

தீவிரவாத அமைப்பு என தெரிந்தும் வைகோ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வருவது தேசியத்தின் மீது அவர் வைத்திருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை இந்த நாடே அறியும். மத்திய அரசு தன் விருப்பப்படி நடக்கவில்லை என்பதற்காக மோடியை வைகோ விமர்சிக்கிறார்.
அதனால்தான் வைகோவை கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச்.ராஜாவும் இதே கருத்தைத் தெரிவித்தார். வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்றும் ராஜா சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு என, புரியவில்லை. இதற்காக அவரது வீட்டை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றுள்ளனர்.
தமிழகத்தில் எனக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ சிறு பிரச்னை கூட இருக்கக்கூடாது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி உள்ள நிபந்தனை ஜாமீனில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனால் தான் இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்ய மனு போடுவேன் என சொன்னேன். இதை முழுமையாக அறியாமல் உச்சநீதிமன்றம் என்ன சுப்பிரமணியன் சுவாமி வீட்டு சொத்தா என வைகோ கேட்டிருக்கிறார். இப்படித்தான் அரைவேக்காட்டுத்தனத்துடன் வைகோ பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல விடுதலைப் புலிகளை எதிர்ப்பதால் டபுள் ஏஜன்ட் என கூறியுள்ளார். நான் டபுள் ஏஜன்ட் யாருக்கு என அவர் சொல்லவில்லை. அவர் தான் விடுதலைப் புலிகள் ஏஜன்டாக செயல்படுகிறார். தொடர்ந்து அவர் இப்படியே செயல்பட்டால் மதிமுகவையும் தடை செய்யும் முயற்சியில் இறங்குவேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications