சுவாதி கொலை: கொலையாளியை பிடிக்க மேலும் 2 தனிப்படை.. மொத்தம் 10 படைகள் விசாரணை!
சென்னை: சுவாதி கொலை தொடர்பாக விசாரிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதியை கொன்றவனைப் பிடிக்க ஏற்கனவே 8 தனிப்படைகள் விசாரித்துவரும் நிலையில் மேலும் 2 படைகளுடன் சேர்த்து 10 தனிப்படைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையில் இன்னும் பெரிய அளவில் திருப்பம் இல்லை என்றாலும், விசாரணைக்கு உதவும் வகையில் புதிய வீடியோ ஓன்று கிடைத்துள்ளது. இதில் கொலையாளி இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து தற்போது விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாதி பணிபுரிந்த நிறுவனத்திற்கு சென்று, அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் போன்ற பொருட்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலைக்குப் பின்னர் சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்ததால், கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரயில் ஏறும் சுவாதி பரனுர் ரயில் நிலையத்திலதான் இறங்கிச் செல்வார் என்பதால் இன்று காலையில் பரனூர் ரயில் நிலையத்திலும், சுவாதியின் அலுவலகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுவாதியின் கொலை வழக்கை விசாரணை நடத்த மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க ஏற்கனவே 8 தனிப்படைகள் விசாரித்துவரும் நிலையில் மேலும் 2 படைகளுடன் சேர்த்து 10 தனிப்படைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications