சுவாதி கொலையாளி பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த மேன்சன் காவலாளி
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி ராம்குமார் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தைப் பார்த்த ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் காவலர், அந்த உருவத்தை ஒத்த நபர், தங்களது மேன்ஷனில் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையிலேயே கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவத்தில், குற்றவாளியை பிடிக்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக திணறி வந்தனர்.கொலையாளி என சந்தேகிக்கப்படும் சிசிடிவி கேமரா பதிவை காவல்துறையினர் வெளியிட்டது மட்டுமே மிகப்பெரிய ஆதாரமாக இருந்தது.
இந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தைப் பார்த்த ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் காவலர், அந்த உருவத்தை ஒத்த நபர், தங்களது மேன்ஷனில் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
கொலையாளி ராம்குமார் தங்கியிருந்த மேன்சன் ஏ.எஸ்.மேன்சன் சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ளது. இங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் தான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. இந்த மேன்சனில் தரைதளம் மற்றும் 2 மாடிகள் இருக்கின்றன. இதில் 70 அறைகள் உள்ளன. மாத வாடகைக்கு அறைகள் கொடுக்கப்படுகிறது.

இந்த மேன்சனில் 2வது தளத்தில் உள்ள 404-வது அறையில் ராம்குமார் தங்கி இருந்தான். இந்த மேன்சனில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள்.
சுவாதி கொலையில் துப்பு துலங்க காரணமாக இருந்தவர் மேன்சன் காவலாளி கோபால். போலீசார் கடந்த ஒரு வாரமாக கொலையாளியின் படத்தை சூளைமேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர். தங்கும் விடுதிகளிலும் அவனது புகைப்படத்தை ஒட்டி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் அவனது புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.
சென்னை சூளைமேடு மேன்சனில் கைப்பற்றப்பட்ட சுவாதி கொலையாளி ராம்குமார் குறித்த ஆவணம்
சென்னை சூளைமேடு மேன்சனில் கைப்பற்றப்பட்ட சுவாதி கொலையாளி ராம்குமார் குறித்த ஆவணம் https://t.co/Qb2A0TJ6Pw pic.twitter.com/0BQ85Qzh3l
— Oneindia Tamil (@thatsTamil) July 2, 2016
இந்த படத்தை பார்த்த மேன்சன் காவலாளி கோபாலுக்கு அதே மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளி ராம்குமார்தானா என்பதை உறுதி செய்ய மேன்சனில் உள்ள ஆதாரங்களையும் திரட்டினர்.

அந்த மேன்சனில் 5 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளை போட்டோவாக எடுத்து ஆய்வு செய்தனர். அவர் தங்கியிருந்த 404ம் எண் கொண்ட அறையில் சோதனை நடத்தப்பட்டது. ராம்குமாருடன் 50 வயதுள்ள மேலும் ஒருவரும் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவர் யார் என்றும் போலீசார் விசாரித்தனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் ராம்குமார் இந்த மேன்சனில் வந்து தங்கியுள்ளார். அந்த அறையில் சிக்கிய ஆதாரங்கள் மற்றும் காவலாளி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ராம்குமார்தான் சுவாதியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான படமும், மேன்சனில் இருந்த ராம்குமாரின் படமும் ஒத்துப்போனது. இதையடுத்து ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications