சுவாதி கொலை சம்பவம்.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: சுவாதி கொலை வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று கேள்வி எழுப்பியது.

நீதிபதிகள் கேள்வி
தமிழக அரசு வழக்கறிஞரான சண்முக வேலாயுதத்திடம், நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். கொலை குற்றவாளியை கைது செய்வதில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழக போலீசார் இணைந்து செயல்படுவதில் ஏதேனும் இடையூறு உள்ளதா எனவும் நீதிபதிகள் கேட்டனர்.

தட்டி கேட்போம்
நீதிமன்றத்தில் மட்டுமல்ல, எங்கே குற்றங்கள் நடந்தாலும், அதை நீதிமன்றம் தட்டி கேட்கும் எனவும் நீதிபதிகள் அதிரடியாக கருத்து தெரிவித்தனர்.

தானாக விசாரணை
சுவாதி வழக்கை ஹைகோர்ட் தானே முன்வந்து விசாரிப்பது குறித்து, தலைமை நீதிபதியிடம் ஆலோசித்துவிட்டு முடிவு செய்ய உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நெருக்கடியில் போலீஸ்
சுவாதி கொலை வழக்கு விசாரணையில் போலீசாருக்கு என்ன இடையூறு உள்ளது என்றும் அரசு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், சோஷியல் மீடியா மட்டுமின்றி, நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதால், போலீசாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications