சுவாதி வழக்கு: சென்னை போலீசாருக்கு முதல்வர் ஜெ., பாராட்டு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த சென்னை பெருநகர காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜெயலலிதா, சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை தமிழக காவல்துறை மீண்டும் நிரூபித்துள்ளது என்று பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதியன்று காலை மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி, மர்ம இளைஞரால் படுகொலை செய்யப்பட்டார். காலை 6.30 மணி அளவில் நிகழ்ந்த இக் கொலை, பொது மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை பெருநகர காவல்துறையினர் 8 தனிப்படை அமைத்து பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கின் குற்றவாளி என கருதப்படும் ராம்குமார் என்ற இளைஞரை அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் வைத்து போலீசார், சுற்றி வளைத்து பிடித்தனர்.
ராம்குமாரை போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் தற்கொலை முயற்சி செய்ததால், அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த சென்னை பெருநகர காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜெயலலிதா, சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை தமிழக காவல்துறை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததற்கு முதல்வர் ஜெயலலிதா காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications