சுவாதி கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை தரவேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: சுவாதியை கொடூரமா கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும். அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவரை கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் கண்டுபிடிக்காமல் இருப்பது சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் துறையினர் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி குறுகிய காலக்கெடுவிற்குள் இந்தக் கொடூரமான கொலையை செய்த நபரை கைது செய்ய வேண்டும். அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
சுவாதியின் கொலை சம்பந்தமாக தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு காவல் துறையினர் உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற தவறான செய்திகள் இனி வரும் காலங்களில் வெளிவராமல் தடுக்க முடியும்.
பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல் துறையினர் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய அரசு நம் நாட்டில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும், மாநில அரசு தமிழகத்தில் பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலும் சிசி டிவி கேமராவைப் பொருத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications