சுவாதி கொலையில் எனது மகன் குற்றவாளி இல்லை... ராம்குமாரின் தந்தை 'திட்டவட்டம்'
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் எனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என ராம்குமாரின் தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த மாதம் 24-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.

அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவம் இன்று செங்கோட்டையில் வழக்கறிஞர்கள் ராம்ராஜ், மார்க்ஸ் ரவீந்திரநாத் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த கொலைக்கும் எனது மகன் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் போலீசார் எனது மகனை குற்றவாளியாக்கி விட்டனர்.
உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலாளர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பபியுள்ளேன்.
சுவாதி கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பரமசிவம் கூறினார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications