போலீஸ் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது? தினமும் பேப்பர் படித்து அறிந்துகொண்ட ராம்குமார்
நெல்லை: சுவாதி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் கொலையாளி ராம்குமார் நெல்லை மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஓடுகளால் வேயப்பட்ட சிறு வீடுதான் ராம்குமாரின் சொந்த வீடு. அங்கு, பெற்றோர், தங்கை ஆகியோருடன் தங்கியிருந்தார்.

கொலையாளியை போலீசார் வலைவீசி தேடிவருவதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை பார்த்து, பயந்து போனார் ராம்குமார்.
பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், போலீசார் நடத்தி வரும் விசாரணை குறித்து, தினசரி செய்தித்தாள்களை வாங்கி படித்துள்ளார். டிவி உள்ளிட்ட பிற ஊடக செய்திகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார்.
சென்னை மேன்ஷன் வாட்ச்மேன் தந்த தகவலையடுத்து, நெல்லை போலீசாருக்கு தகவலை பரிமாறினர் சென்னை போலீசார். இதையடுத்து மஃப்டியில் ராம்குமார் வீட்டை நோட்டமிட்டனர் போலீசார்.
ராம்குமார் சொந்த ஊரில்தான் இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர், கூடுதல் போலீசாரை வரவழைத்து, நேற்று இரவு ராம்குமாரை கைது செய்ய முயன்றனர். இதையறிந்ததும் பிளேடால் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார்.
போலீசார் துரிதமாக செயல்பட்டு உயிரோடு அவரை மீட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராம்குமார் பயன்படுத்தும் படுக்கையின் கீழே, கடந்த பல நாட்களாக வாங்கப்பட்ட செய்தித்தாள்கள் கிடக்கின்றன. போலீசார் விசாரணை எந்த கோணத்தில் சென்று கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த செய்திகளை பயன்படுத்தியுள்ளார் ராம்குமார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications