2 மாதமாக மர்ம நபர் பின் தொடர்ந்ததாக என்னிடம் கூறினார் சுவாதி... நண்பர் முகம்மது பிலால்
சென்னை: சுவாதி குறித்தும் அவரது குணாதிசயம் குறித்தும் அவரது நண்பரான முகம்மது பிலால் என்பவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சுவாதியைக் கொன்றதாக கூறி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தேவையில்லாம் பேஸ்புக்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் பிலால் என்ற பெயரில் அவருக்கு உண்மையில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் சுவாதி படுகொலை குறித்து உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
முகம்மது பிலால் என்ற அந்த நண்பர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். இவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து முகம்மது பிலால் கூறுகையில், போலீஸார் எங்களிடமும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக்கு நானும், எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்தோம். கொலையாளி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதற்காக போலீஸாருக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சுவாதி எனக்கு நெருங்கிய தோழி. தன்னை பற்றியும், குடும்பத்தை பற்றியும் விவரமாக என்னிடம் எடுத்துரைப்பார். தன்னை ஒருவர் சுமார் 2 மாதமாக மாலை நேரங்களில் பின் தொடர்வதாக சுவாதி என்னிடம் தெரிவித்தார். ஒருமுறை தான் பயணம் செய்த ரயில் பெட்டியில் வந்து தனது அலுவலகத்தை நோட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சுவாதி தைரியமான பெண். எதையும் நேருக்கு நேர் சந்திப்பதில் வலிமையானவர். நம்பிக்கை கொண்டவர். சுவாதியை கொன்ற கொலையாளி ஒரு கோழை, முன்பக்கமாக தாக்கி இருந்தால் சுவாதி நிலைமையை சமாளித்து தடுத்து இருப்பார்.
சுவாதி கொல்லப்பட்ட செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனக்கு ஆறுதல் அளித்து கொலையாளியை கண்டு பிடிக்க உதவிடுமாறு எனது உறவினர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஜூன் 24-ந்தேதி அன்று நான் சுவாதிக்கு போன் செய்தேன். ஒரு ரிங் ஆனதும் கால் கட்டாகி விட்டது. இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தேன்.
பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். அவர்களை கட்டுப்படுத்த கூடாது. ஆனால் பெண்களுக்கு எதிராக இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த தண்டனை பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
சுவாதி மிகவும் கலகலப்பானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். யாரும் சோகமாக இருந்தால் அவருக்குப் பிடிக்காது. அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் சுவாதி. மிக மிக நல்ல பெண்.
சரியாண கோணத்தில் இந்த வழக்கின் விசாரணை சென்றதால் கொலையாளி விரைவில் சிக்கியுள்ளார். இதற்காக போலீஸாருக்கு நன்றி என்று கூறியுள்ளார் முகம்மது பிலால்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications