பீதி கிளப்பிய பன்றிக் காய்ச்சல்- குடும்பமே தற்கொலை முயற்சி: பெற்றோர் பலி- மகன் உயிர்பிழைப்பு!!
நெல்லை: நெல்லையில் பன்றிக்காய்ச்சல் பீதியால் தந்தை, தாய்,மகன் விஷம் குடித்ததில் தந்தையும் தாயும் பலியாயினர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ளது சேர்ந்தமரம் கள்ளம்புளியை சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி சூரியகாந்தி இவர்களது ஒரே மகன் சுடலைமணி பத்தாம் வகுப்பு மாணவர். சுடலைமணிக்கு கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துள்ளார்.
அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது.தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் காய்ச்சல் நீடித்ததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சலாக இருக்கலாம் என சொல்லியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த தானத்தை,தாய்,மகன்.உள்ளிட்ட மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, விஷம் அருந்தினர் . இதில் மாணிக்கம் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார்.
சுடலைமணியும், அவரது தாயாரும் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் தாயார் சூரியகாந்தியும் பலியானார்.தந்தையும், தாயாரும் பலியாகிவிட்ட சூழலில் மகன் சுடலைமணி சிகிச்சையில் உள்ளார்.காய்ச்சல் குறித்து அப்பகுதியினர் தவறான பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியதால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications