வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்: 3 லட்சம் 'டாமி புளூ' மாத்திரைகள் தயார் நிலையில்..
கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டு உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை பீளமேடு, சாய்பாபா காலனியை சேர்ந்த 8 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை சேர்ந்த 46 வயது பெண், கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த 55 வயது பெண், கோவை காந்திபுரத்தை சேர்ந்த 33 வயது பெண் ஆகியோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்குரிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், காலநிலை மாறுபாட்டால் தான் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
பன்றிக்காய்ச்சலும் மற்ற காய்ச்சல் போன்றதுதான். உரிய சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும். ரத்தக்கொதிப்பு, இருதய கோளாறு, நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் டாக்டர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
காய்ச்சல் பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இருமல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. அதனை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றார்.
3 லட்சம் டாமி புளு மாத்திரைகள்:
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பன்றி காய்ச்சலை கண்டறிவதற்கு கிங் மருத்துவ நிலையம் உட்பட 6 ஆய்வு மையங்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இது தவிர 13 தனியார் ஆய்வு மையங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக சிறப்பு வார்டுகள் சென்னை தண்டையார் பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ நிலையங்களில் 3 லட்சம் டாமி புளு மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
044-24350496, 24334811, 94443-40496, 93614-82899 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 104 சேவையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications