போராட்டத்தில் தொண்டர்களை காணோம் என்று கேட்ட நிருபர்.. வேட்டியை மடித்து கட்டிய டி.ராஜேந்தர்
ஜிஎஸ்டிக்கு எதிராக டி.ராஜேந்தரின் லட்சிய திமுக ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டத்தில் எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்று கேட்ட கேள்வியால் டி.ராஜேந்தர் கோபமடைந்தார்.
சென்னை : மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிக்கு எதிராக டி.ராஜேந்தரின் லட்சிய திமுக ஆர்ப்பாட்டத்தின் போது எத்தனை பேர் கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டதால் டி.ஆர் டென்ஷன் ஆனார்.
மத்திய அரசு வரியை கொண்டு வந்து மக்களை வாட்டுவதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டி.ராஜேந்தரின் லட்சிய திமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது மத்திய அரசே வரி போட்டு மக்களை வதைக்காதே, தமிழகம் தாங்காது என்று கோஷமிட்டனர். ஏழைகள், குடிசைத்தொழிலாளர்களை வதைக்கக் கூடாது, குடிநீருக்குக் கூடவா வரி, தெரியாதா அரசுக்கு ஏழை மக்களின் வலி என்று ஏற்ற இறக்கத்தோடு டி.ராஜேந்தருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மல்லுகட்டிய டி.ஆர்
அதன் பின்னர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசிய போது, திரையில் போராடுபவனல்ல டி.ராஜேந்தர். தரையில் போராடுபவன் என்று அடுக்குமொழியை அவிழ்த்துவிட்டார். செய்தியாளர் ஒருவர், உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் இல்லையே? என்று கேட்க கொதித்து போனவர், வேட்டியை மடித்துக்கொண்டு மல்லுகட்ட வந்துவிட்டார்.

கூட்டத்தில் ரகளை
"கூட்டத்தை எண்ணிப்பார்த்துவிட்டு சொல்லுங்க, 50- 60 பேர் தானா இருங்காங்களான்னுட சொடுக்கு போட்டு ரகளை கிளப்பிவிட்டார் டி.ராஜேந்திரன். இது காசு கொடுத்து சேர்ந்த கூட்டமல்ல தானாக சேர்ந்த கூட்டம் எங்களைப் பார்த்தா கூட்டத்தில் எத்தனை பேர் என்று கேட்கிறீர்கள்? என்று வரிந்து கட்டியிவரை, அவரது கட்சியினரே ஆசுவாசப்படுத்தினர்.

ஆயில் எடுத்து ஆயுளை குறைக்காதீர்
தொடர்ந்து பேசிய டி.ராஜேந்திரன், தமிழகத்தில் ஆயில் எடுப்பதாகச் சொல்லி மக்களின் ஆயுளை குறைக்க வேண்டாம் என்றார். மக்களுக்காக போராடும் தான் டுவிட்டரில் பேசாமல் மக்களோடு மக்களாக நின்று பேசுவதாகச் சொல்லி, நடிகர் கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்தார் டி.ராஜேந்திரன்.

தமிழன் என்பதால் மதிப்பில்லை
தமிழகத்தை சேர்ந்தவன் என்பதால் என்னை தலைவனாக இவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். கள்ளக்குறிச்சியில் ஒரு முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது தான் வெற்றி பெறுவதாக கணிப்புகள் சொன்னபோதும் இயந்திர வாக்குப்பதிவால் தோற்கப்பட்டேன். எனவே இந்தியாவிற்கு இயந்திர வாக்குப்பதிவு கூடாது, தேர்தலை லட்சிய திமுக சந்திக்கிறது இல்லையா என்று பொருத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications