ஜெயலலிதா கட்டம் சரியா இருக்கு... சட்டம் சாதகமா தீர்ப்பு கொடுத்தது: சொல்வது 'ஜோசியர்' டி.ராஜேந்தர்
சென்னை: ஜெயலலிதாவின் ஜாதகத்தில் இப்போது கட்டம் சரியாக இருக்கிறது. இதனால் அவருக்கு சட்டம் சாதகமான தீர்ப்பினை அளித்துள்ளது என்று ரைமிங் ஆக தனது ஆதரவை தெரிவித்துள்ளார் லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர்
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.

அரசியல் ஆதாயமா?
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காகவோ, பதவி ஆசைக்காகவோ ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததில்லை. இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட அதிமுகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டதின் பேரில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

சரியான தீர்ப்பு
என்னுடைய ஆதரவு ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காக அல்ல. அதிமுக கேட்டுக் கொண்டதால் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார். அவருக்கு சரியாக இருக்கிறது கட்டம். அதனால் சரியான தீர்ப்பு சொன்னது சட்டம். எதிரிகளுக்கு ஏன் காட்டம்?

வியப்பு ஏன்?
நான் எதுகை மோனையோடு பேசுவதாக நினைக்கவேண்டாம்.
தற்போது, ஜெயலலிதா விடுதலை குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி,வியப்பு தெரிவித்துள்ளன. அன்றைக்கு பவானிசிங் நியமனம் செல்லாது என்று கூறிய உடன் நல்ல தீர்ப்பு என்று அறிக்கை விட்டனர்.

நீதிபதிகளின் பார்வை
இப்போது வெளியான இந்த தீர்ப்பில் வியப்படைய என்ன இருக்கிறது. வழக்கு நீதிமன்றங்களில் இருந்து மாறும் போது நீதிபதிகள் பார்வையும் மாறுகிறது. அந்த வகையிலேயே ஜெயலலிதா விடுதலையாகி இருக்கிறார்" என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications