மெர்சலுக்கு ராகுல் காந்தி ஆதரவு இருக்கட்டும்.. ஈழ தமிழர் இன அழிப்பு பற்றி பேசுவாரா? தமிழிசை கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை : இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தியின் கருத்து என்ன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் திரைப்படத்திற்கு மோடி இடையூறு செய்யக் கூடாது என்றும், திரைப்படங்கள் என்பது தமிழர் கலாசாரம் என்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று டிவிட் செய்திருந்தார்.

இதகுறித்து தமிழிசை பதிலடியாக கூறுகையில், ராகுல் காந்தி அரசியல் குளிர்காய்கிறார். கொத்துக் கொத்தாக இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராகுல் காந்தி என்ன செய்தார், அதுகுறித்து இவரின் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார் தமிழிசை. மேலும் மெர்சல் படப் பிரச்னை சுமுகமான முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications