இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 6 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து 12-10-2015 அன்று 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர்.
இதுவரை மொத்தம் 78 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 38 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தும் நடவடிக்கையானது, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்கும் செயல். இந்த செயலை இந்தியா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
எனவே, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications