ஜெயலலிதா அனுமதியோடு வீடியோ பதிவு - ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த சசி
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளார் சசிகலா.
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை அவரது அனுமதியுடன் வீடியோ எடுத்ததாக சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு, 2016ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற போதும் எடுக்கப்பட்ட வீடியோக்களுடன் சேர்த்து மொத்தம் 4 வீடியோ பதிவுகளை ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளார் சசிகலா.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் வெளியுலக மக்கள் யாராலும் அவரை பார்க்க முடியவில்லை. டிசம்பர் 6ஆம் தேதியன்று காலையில் அவரது சடலத்தைத்தான் மக்கள் பார்த்தனர்.
ஜெயலலிதா உடனே கூட இருந்த சசிகலா ஆறுமுகசாமி ஆணையத்தில் தனது தரப்பு வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தது பல நடந்த பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 22ஆம் தேதியன்று பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்தோம். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதா, ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர்கள் ஓபிஎஸ், சி.விஜயபாஸ்கர், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கண்ணாடி வழியாக பார்த்தனர்.வேறு அறைக்கு மாற்றும்போது நிலோபர் கபில் உள்பட ஒரு சில அமைச்சர்கள் பார்த்தனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது அவரது அனுமதியுடன் வீடியோக்கள் எடுத்தோம். அந்த வீடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சிகிச்சை பெற்ற போதும் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. இந்த 4 வீடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளார் சசிகலா.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications