உடனடியாக தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசுங்கள்.. வைகோ கோரிக்கை
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின்,தொழிற்சங்கத் தலைவர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அழைத்துப் பேசவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தையின் மூலம் இவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும். சென்ற 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெறாமல், கடந்த 16 மாதங்களாக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இதரப் பலன்களும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள எம்.எல்.எப். சங்கம் உட்பட 11 சங்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அதன் மீது 26.12.2014 அன்று தொழிலாளர் துறை அதிகாரியின் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று 27.12.2014 தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூகமான தீர்வு கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் அனைத்துத் தொழிற்சங்கங்களும் 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு செய்துள்ளன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் தொழிலாளர்களின் போராட்டத்தினால், தமிழக மக்களுக்கு குறிப்பாக பேருந்து பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களையும், இன்னல்களையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications