போதும் கண்ணாமூச்சி ஆட்டம்.. மீனவர்களை விடுவித்தால்தான் பேச்சு.. இலங்கைக்கு தமிழக அரசு 'வார்னிங்'!!
ராமேஸ்வரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு நேற்று பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் 54 மீனவர்களும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டால்தான் சென்னையில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வருகின்ற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
அவர்களை வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இலங்கை மீனவர்கள் குழு சென்னை வந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது எப்படி சரியாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனிடையே தமிழக-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 54 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு நேற்று பரிந்துரை செய்தது.
இதனிடையே 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டால்தான் சென்னையில் இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications