கீழடியில அந்த ஒரு ஆளுதான் வேல பாப்பாரா.. மத்தவங்க பாக்க மாட்டாங்களா: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு
கீழடி அகழாய்வின் தலைவர் அமர்நாத் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, “அந்த ஒரு ஆளுதான் வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்களா” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பேசி
மதுரை; பல ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அகழாய்வு பகுதியை, மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் பார்வையிட சென்ற போது, பொதுமக்களும் தமிழ் தேசம் அமைப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலும் பல அரிய பொருட்களும் அந்த அகழ்வாய்வில் பொக்கிஷம் போல கிடைத்துள்ளது.
இந்த ஆய்வு நன்றாக நடந்து கொண்டிருந்த போதே, அகழ்வாய்வின் தலைவர் அமர்நாத்தை மத்திய அரசு விதிமுறைகளை காரணம் காட்டி அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது. மேலும், இந்த ஆய்வில் ஈடுபட்ட 26 பேர் கொண்ட மொத்த குழுவினரையும் கூண்டோடு இடமாற்றம் செய்தது மத்திய அரசு.

எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உருவான நிலையில், இன்று கீழடியை பார்வையிட மத்திய கலாச்சார அமைச்சர்கள் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் சென்றனர். அவர்களை கீழடி அகழ்வாய்வை பார்க்க விடாமல், தமிழக பண்பாட்டிற்கு எதிரான பாஜக அமைச்சர்களே திரும்பிப் போங்கள் என்ற கோஷத்தை பொதுமக்களும் தமிழ்தேசம் அமைப்பினரும் எழுப்பினர்.

அந்த ஆளு..
இதனால் கடுப்பான நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "நாங்கள் அமர்நாத்தை மட்டும் மாற்றவில்லை. இந்தப் பணியில் இருந்து 26 பேரையும் மாற்றியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கும் அதிகாரி மாற்றுவது விதி. இது வழக்கமான ஒன்று. அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்" என்று கூறினார்.

பண்பாடா?
அகழ்வாய்வுத் துறையின் தலைவராக உள்ள ஒரு அதிகாரியை அந்த ஆளு என்று ஒரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருமையில் பேசியிருக்கிறார். அவரின் பேச்சிற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஒரு அதிகாரியை அந்த ஆளு என்று சொல்வதெல்லாம் அமைச்சருக்கு அழகாக பண்பாடா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தோட தோட மாலும்
அதே போல அமர்நாத் இடத்திற்கு இன்னொருவரை போட்டிருப்பதாகவும், அவர் தமிழை ஓரளவு புரிந்து கொள்வார் என்றும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார். பேசுவதையே ஓரளவிற்குத்தான் ஒருவரால் புரிந்து கொள்ள முடியும் என்றால், அவருக்கு எப்படி தமிழர்களின் ஆதிகால பண்பாட்டைபுரிந்து கொள்ள முடியும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications