தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கட்டாயம் தமிழை படிக்கவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் சேரக்கூடிய மாணவர்கள் தமிழ்பாடத்தை முதல் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரிய பள்ளிகள் ஏராளம் உள்ளன. இந்த பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 565 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியார் பள்ளிகள் ஆகும். 41 பள்ளிகள் கேந்திரவித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகள் ஆகும்.
இந்த பள்ளிகளில் இப்போது தமிழ் தவிர மற்ற பாடங்கள் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
ஆனால் இனிமேல் தமிழை முதல் பாடமாக படிக்கவேண்டும். அது கட்டாயம் என்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையின்படி வருகிற கல்வி ஆண்டில் 2015-2016ம் ஆண்டில் முதல் வகுப்பில் சேரக்கூடிய மாணவ-மாணவிகள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். அதுவும் முதல் பாடமாக படிக்க வேண்டும். அதே மாணவர் 2-வது வகுப்பிற்கு செல்லும் போதும் அப்படியே படிக்க வேண்டும்.
இப்போது 1-வது வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு பிரச்சினை இல்லை. அடுத்த கல்வி ஆண்டில் 1-வது வகுப்பில் சேரக்கூடிய மாணவ-மாணவிகள் கட்டாயம் தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்துப்படிக்க வேண்டும். இது கட்டாயம். இப்படி படிப்படியாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் அமல்படுத்தப்படும்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications