சார்லி ஹெப்டோ பாணியில் தாக்குவோம்: முன்னணி தமிழ் நாளிதழுக்கு மிரட்டல் கடிதம்
சென்னை: சார்லி ஹெப்டோ பாணியில் தாக்கப் போவதாக முன்னணி தமிழ் நாளிதழ் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முன்னணி தமிழ் நாளிதழ் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் நேற்று - பாரீஸ் சார்லி ஹெப்டோ, நாளை - நீங்கள் தான் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தில் இந்திய வரைபடம் இருந்தது. மேலும் அதில் ஒசாமா பின் லேடனின் புகைப்படமும் இப்படிக்கு அல் கொய்தா என்றும் எழுதப்பட்டிருந்தது. அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது கையெழுத்தாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அஞ்சல் மூலம் வந்த அந்த கடிதத்தில் 3/10, உக்கடம், கோவை, தமிழ்நாடு, இந்தியாவைச் சேர்ந்த தி பேஸ் மொமன்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நாளிதழின் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அந்த கடிதம் எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு பொய்யானதாக இருக்கலாம். இல்லை என்றால் யாராவது விஷமிகள் விளையாடலாம், இல்லை வேறு ஏதாவது திட்டமாகவும் இருக்கலாம். நமக்கு தெரியவில்லை. விசாரணை முடிந்த பிறகே எதுவும் கூற முடியும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications