வீ சேகர் அப்பாவி.. அவரை இப்படி இழிவுபடுத்தலாமா...! - இது சினிமாக்காரர்கள் ஆதங்கம்
பிரபல இயக்குநர் வீ சேகர், சிலை திருட்டு வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டது உண்மையிலயே திரையுலகினரை மட்டுமல்ல, அவர் படங்களை ரசித்த அத்தனைப் பேருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இருந்தாலும் ஆதாரங்களுடன் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அவரது வாக்குமூலத்தையும் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், அந்த வாக்குமூலத்தை அவர் தரவில்லை என்று திரையுலகினர் கூற ஆரம்பித்துள்ளனர். அவர் அப்பாவி என்றும் உண்மையை தீர விசாரிக்க வேண்டும் என்றும் கூறி தமிழ் திரையுலகம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று தமிழ் திரையுலக அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
மதிப்புமிகு தமிழக காவல் துறைக்கு அன்பான வேண்டுகோள்.
தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், திரு.ஏ.சேகர் ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு சொன்னவர். அதன் மூலம் மக்களின் நன் மதிப்பை பெற்றவர்.
இப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது திடீர் என்று சிலை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கின்றது. இதை கேட்டவர்களும் படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது திரையுலகைச் சார்ந்த எங்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துள்ளது.
மேலும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன் அவர்களும், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி அவர்களும் புழல் சிறைக்கு சென்று திரு.வீ.சேகர் அவர்களைச் சந்தித்தபோது இந்த குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார்.

மேலும், தான் எந்த ஒப்புதலும், எழுத்து மூலமாகவும் வாக்குமூலமாகவும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தயவு செய்து உண்மையைக் கண்டுபிடித்திட தமிழ் திரைப்படத்துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குநர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஸ்காட்லாண்டு காவல் துறைக்கு இணையான நமது மதிப்புமிகு தமிழக காவல் துறையை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்த் திரையுலகம்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications