தமிழக மீனவர்கள் துபாயில் பரிதவிப்பு- பெற்றோர் கலெக்ரிடம் கண்ணீர்
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர் துபாயில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீருடன் மனு கொடுத்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் புத்தன்துறையை சேர்ந்த 12 பேர் துபாய் நாட்டில் உள்ள அஜ்மன் என்ற இடத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்கள் துபாயை சேர்ந்த மத்தா என்பவரது விசைப்படகில் தொழில் செய்து வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி துபாய் கடலில் இவர்கள் 12 பேரும், துபாயை சேர்ந்த 2 பேரும் ஆக மொத்தம் 14 பேர் ஓரே விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது துபாயை சேர்ந்த மீனவர் கமீஸ் கடலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
அவரை சக மீனவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக மற்ற மாணவர்களை துபாய் நாட்டு அதிகாரிகள் பிடித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் விசைப்படகின் அரேபியா முதலாளி அவர்களை கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விசைப்படகிலேயே கடலுக்குள் சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு படகில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது முதலாளி பாஸ்போர்ட் மற்றும் விசா போன்வற்றை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்க முடியாது. இதனால் அரேபியா போலீசார் அவர்களை கைது செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிய வந்ததை அடுத்து தெற்காசிய தோழமை மீனவர் கூட்டமைப்பு பொது செயலாளர் சர்ச்சில் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நாகர்கோவில் வந்து குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் சர்ச்சில் கூறுகையில், " துபாய் மீனவர் பலியான சம்பவத்தில் தமிழக மீனவர்கள் மீது எந்த தவறும் இல்லை.
அவராக தவறி கடலில் விழுந்துள்ளார். இதற்கு தமிழக மீனவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இருப்பினும் உள்ளூர் நெருக்கடியால் அரேபியா முதலாளி பாஸ்போர்ட் உள்ளி்ட்டவற்றை திரும்ப தர மறுக்கிறார். எனவே அவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications