மத்திய சென்னை தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் வெட்டிக்கொலை

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் அக்பர் (வயது 32). தமிழ்மாநில முஸ்லிம்லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். ரமலான் நோன்பு காலம் என்பதால் அக்பர் நோன்பு இருந்து வந்தார்.
திங்கட்கிழமையன்று காலை 4 மணியளவில் நோன்பு இருக்கும் ஷகர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் தெருவில் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அக்பரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மசூதி அருகில் இருந்த காரணத்தால் சத்தம் கேட்டு பலர் வரவே, மர்மகும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கு பலத்த வெட்டு காயத்துடன் கிடந்த அக்பரை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்பரைக் கொன்ற கும்பல் திட்டமிட்டு தங்கள் கொலை வெறி தாக்குதலை நிறைவேற்றியுள்ளது.
அக்பர் கொல்லப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர்கள், கட்சி நிர்வாகிகள் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த படுகொலை குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications