இலங்கை மீதான கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு எதிர்ப்பு- சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!!
சென்னை: தமிழினப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்; கலப்பு நீதிமன்ற விசாரணையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக மே 17 இயக்கத்தின் சார்பாக நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை பட்டியலிட்டு சர்வதேச நீதிபதிகள், இலங்கை நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் தி.க, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications