தமிழகத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவு: ஏற்பு - 5362 தள்ளுபடி - 1783
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.
மொத்தம் 7145 வேட்புமனுக்களில் 5362 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1783 வேட்புமனுக்கள் தள்ளபடி செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது.

இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுப் பார்வையாளர்கள் 122 பேர் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன.
இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மொத்தம் 7145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் அதில் 1783 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும், 5362 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications