சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடி மருந்து பார்சல்
தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடி மருந்து பார்சல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடி மருந்துகளுடன் கூடிய பார்சல் மற்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு அடிக்கடி கொலை மிரட்டல் கடிதங்கள், தொலைபேசிகள் வந்து கொண்டிருட்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்த மத்தியில் ஆளும் பாஜக அரசு தடைவிதித்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்
கடந்த வாரம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், மாட்டிறைச்சிக்கு எதிராக பேசுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரித்து வந்தனர்.

மர்ம நபர் மிரட்டல்
இந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதி தமிழிசைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்திருந்த நிலையில், மீண்டும் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

போலீஸ் வழக்குப் பதிவு
இது குறித்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், ஏற்கெனவே பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவரும், தற்போது கடிதம் அனுப்பியவரும் ஒரே நபரா என்றும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடி மருந்து பார்சல்
இன்று சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடி மருந்துகளுடன் கூடிய பார்சல் மற்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார். புகாரையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications