செமட்விஸ்ட்.. அமைச்சரவை மாற்றமா? வந்து விழுந்த கேள்வி! சிரித்தபடி அமைச்சர் துரை முருகன் சொன்ன பதில்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது என பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையே இன்று மூத்த அமைச்சர் துரை முருகன் ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டதற்கு துரை முருகன் சொன்ன பதில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டு ஆட்சியை தமிழகத்தில் நிறைவு செய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தான் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி பத்திரிகையாளர்கள் இன்று அமைச்சர் துரை முருகனிடம் கேட்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் துரை முருகன் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதுபற்றி துரை முருகன் கூறியதாவது: ‛‛நான் திருநெல்வேலி கூட்டத்தை முடித்துவிட்டு இன்று தான் சென்னை வந்தேன். கோட்டைக்கு சென்றுவிட்டு சில முக்கிய ஆவணங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளேன். இந்த பரபரப்பு எல்லாம் நீங்கள்(பத்திரிகையாளர்கள்) தான் காட்டுகிறீர்கள். நான் ஒன்றும் ஆளுநர் வீட்டுக்கு போகவில்லை. போனால் போகபோகிறேன் என்று கூறிவிடுவேன். இதில் என்ன இருக்கிறது'' என சிரித்தபடி கூறினார்.

இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருந்து செய்தி வருகிறது. அமைச்சரவையில் மாற்றம் உள்ளது. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என செய்திகள் வருகிறது'' என கேள்வி கேட்டது. அதற்கு துரை முருகன், ‛‛அதுவும் எனக்கு தெரியாது'' என்றார். மேலும் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்விக்கு ‛யாமறியேன் பராபரமே' என துரை முருகன் பதிலளித்தார்.
அதன்பிறகு இன்னொரு பத்திரிகையாளர், ‛‛நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் ஏதேனும் நடக்கிறதா?'' என கேட்டார். அதற்கு துரை முருகன், ‛‛ஒரு முதல் அமைச்சருக்கு தன்கீழ் பணியாற்றுபவர்களை மாற்றலாம். எடுக்கலாம். ஒருவருக்கு பதில் புதியவர்களை நியமிக்கலாம். இது முதல் அமைச்சரின் உரிமை. அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அது நடக்கிறதா? என்பது உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ? அவ்வளது தான் எனக்கும் தெரியும்'' என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications