புழல் சிறையில் டெலிபோன் பூத், பேக்கரி: 'கேக்'கில் இரட்டை இலை...பரபரப்பு!!

புழல் மத்திய சிறை வளாகத்தில் பொருட்கள் விற்பனைக்கூடம், காவலர்கள் காத்திருப்புக் கூடம், பார்வையாளர்கள் காத்திருப்பு அறை, சோதனை அறை, அடுமனை தொழில் கூடம் மற்றும் தண்டனை சிறையில் இரண்டு தொலைபேசி, விசாரணை சிறையில் கைதிகள் பேசுவதற்கு ஆறு தொலை பேசி, மகளிர் சிறையில் ஒரு தொலைபேசி ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார்.
பின்னர் சிறைக்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிறை கைதிகளால் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் காய்கறி, கீரைகளை வாங்கி சென்றனர்.
கைதிகள் தயாரித்த கேக்கில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. பேக்கரி, காய்கறி விற்பனை கூடம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என்றும் இங்கே பொது மக்கள் மற்றும் சிறைக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கிப் பயன்அடையுமாறு சிறைத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அனைத்து சிறைச்சாலைகளிலும்
சிறை கைதிகள் தங்களது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வகையில், ரூ. 1 கோடியே 63 லட்சம் செலவில் சென்னையில் 2 மத்திய சிறைகள் மற்றும், வேலூர், திருச்சி, கடலூர், மதுரை, நெல்லை, சேலம், கோவை ஆகிய 9 மத்திய சிறைகள், சென்னை, திருச்சி, வேலூர் ஆகிய 3 பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளி ஆகிய இடங்களில் 54 தொலைபேசியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முறைக்கு 10 நிமிடங்கள் என்ற கணக்கில் ஒரு மாதத்திற்கு 3 முறை, சிறையில் இருந்தபடியே சிறைவாசிகள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களிடம் பேசலாம். சிறைகளில் பொது தொலைபேசி வைக்கப்பட்டதால் செல்போனை கைதிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்துவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications