இளைஞர்களுக்கு முன்மாதிரி சுந்தர்பிச்சை... பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து
சென்னை : கூகுள் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற கூகுள் தேடல் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, சென்னை தமிழர் சுந்தர்பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உலகளாவிய கவுரவமாக கருதப்படுகிறது. இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மற்றும், தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது...
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் போட்டி அதிகரித்துள்ள சூழலில், திறமையாலும், கடின உழைப்பாலும் இவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்று இருப்பது தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.
மாநிலத்தின் இளைஞர்களுக்கு ஒரு மகத்தான எடுத்துக்காட்டை உருவாக்கிவிட்டீர்கள். தமிழக மக்களின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் உங்கள் உயர்வுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, உங்களின் புதிய பதவியில் எல்லா வெற்றிகளையும் அடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications