கருணாநிதி நூற்றாண்டு விழா.. சென்னைக்கு வருகை தரும் குடியரசுத்தலைவர்..நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை:
தனது அழைப்பை ஏற்று சென்னை, கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு ஜூன் 5ஆம் தேதி வருகை தரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் வருகை தரும் இந்திய குடியரசு தலைவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரை தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. அதன்படி முதல் கட்டிடமான ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பி பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டிடமான சி பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து, வருகிற ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதிய மருத்துவமனையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக நேற்று காலை முதல்வர் விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார். குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதேபோன்று திருவாரூர் கலைஞர் மெமோரியல், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவைகளின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழையும் அவரிடம் வழங்கினார். குடியரசுத்தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னை திரும்பினார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் பங்கேற்கிறார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அப்போது சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவாவையொட்டியும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மேற்கண்ட விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி முர்மு 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குடியரசுத்தலைவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், ஜூன் 5ம் தேதி சென்னை, கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கும், அதே நாளில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், எனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்காகவும் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications