உலக முதலீட்டாளர் மாநாடு 2024.. தொழில்துறை அதிசயத்தைக் காண எங்களோடு இணையுங்கள்.. முதல்வர் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பதிவு செய்துள்ளார்கள். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள். 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

Tamil Nadu Global Investors Meet 2024 Join us in celebrating the industrial legacy of Tamil Nadu


மாநாட்டின் சிறப்பு: சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதார நாடுகளாக உள்ளனர். 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

பொருளாதார ஆலோசகர்கள்: மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் உட்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள்.

முதல்வர் ஸ்டாலின்: இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டான்ஃபண்ட் (TANFUND) திட்டத்தை துவக்கி வைப்பார். இந்த மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை 2024, (Semiconductor and Advanced Manufacturing Policy, 2024) வெளியிடப்படும். “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $1 Trillion”) எனும் ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

நனவாகும் கனவு: உலக முதலீட்டாளர் மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பதிவிட்டுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நெருங்கி வருவதால், எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் எங்கள் பிரச்சாரங்கள், #TitansofTamilNadu மற்றும் #OneTrillionDreams ஆகியவை உற்சாகத்தைத் தூண்டியுள்ளன.

புகழும் சிறப்பும்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 450+ சர்வதேச பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன், தமிழ்நாட்டின் தொழில் வளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணம் அமையவுள்ளது. 26 தலைமையாளர்கள் இந்த மாநாட்டின் அமர்வுகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.

தொழில்துறை அதிசயம்: ஒரு MSME பெவிலியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு பெவிலியன், பல நாட்டு அரங்குகள் மற்றும் Startup TN பெவிலியன் ஆகியவை இந்த மாநாட்டில் அமையவுள்ளன. பிரதிநிதிகள் மாநிலத்தின் தொழில்துறை அதிசயத்தைக் காணவும், வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.

எங்களுடன் சேருங்கள்: தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்! என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வரும் பல நாட்டு முதலீட்டாளர்களையும் வரவேற்க சென்னை பெரு நகரம் தயாராகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+