அரசுப் பள்ளிகளை குப்பையாக்கி விட்டுப் போன சட்டசபைத் தேர்தல்!
திருச்சி: சட்டசபைத் தேர்தலால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அசுத்தமாகியுள்ளனவாம். விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இவற்றை சுத்தம் செய்யும் பணி பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம்.
கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அலங்கோலாமாக காணப்படுகின்றன. காரணம் சட்டசபைத் தேர்தல்.
சட்டசபைத் தேர்லின்போது அனைத்து அரசுப் பள்ளிகளும் பூத்துகளாக செயல்பட்டன. இதனால் அங்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்றன. அவை அனைத்தும் இப்போது அகற்றப்பட்டு பள்ளிகளை புதுப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுவர்களில் அசுத்தம்...
சுவர்களில் மார்க்கிங் போட்டது, வாக்காளர்களுக்கான போஸ்டர்கள் உள்ளிட்டவை அப்படி அப்படியே உள்ளனவாம். பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இவற்றை அகற்ற வேண்டிய வேலை பாக்கி உள்ளதாம்.

வேதனை...
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், "மாணவர்களை வைத்துத்தான் நாங்கள் இதைச் சுத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். அந்த அளவுக்கு அசுத்தமாகிக் கிடக்கிறது" என வேதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை...
அரசுப் பள்ளிகளில் வெள்ளை அடிப்பது, வர்ணம் பூசுவது, சுத்தப்படுத்துவது போன்றவற்றை பொதுப்பணித்துறைதகள் செய்து வருகிறது. ஆனால் கோடை விடுமுறை காரணமாக பொதுப்பணித்துறையினர் பள்ளிகள் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லையாம். இனிமேல்தான் அவர்கள் வருவார்களாம்.

கல்வித்துறை அதிகாரிகள்...
பள்ளிகள் திறக்கும் முன்பே அதை சுத்தப்படுத்தி விடுவோம் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினாலும் கூட பெரும்பாலான பள்ளிகளில், பள்ளிகள் திறந்து மாணவர்கள் வந்த பிறகு அவர்களின் உதவியுடன் ஆசிரியர்கள்தான் பெரும்பாலும் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்களாம்.
இதனால், இப்படி அசுத்தமான நிலையிலேயே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறக்க வேண்டிய கட்டாயத்தில் பல தலைமையாசிரியர்கள் இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications