குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்புக்காக சிறைகளில் சிறப்பு அறை.. ஹைகோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறைகளில் குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்புக்காக சிறப்பு அறை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 மாதத்தில் அனைத்து சிறைகளிலும் அடையாள அணிவகுப்புக்கான சிறப்பு அறை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சாட்சிகளை கைதிகள் பார்க்க முடியாத வகையில் கண்ணாடி அறை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Tamil Nadu government to set up a special room for the identification of culprits in jails : High court

மரண, சாட்சி, ஒப்புதல் வாக்குமூலங்களை பதிவு செய்யும் மாஜிஸ்திரேட் அந்த தகவலை விசாரணை அதிகாரிக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை விசாரணை அதிகாரி அந்த தகவலை வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை தமிழில் மொழி பெயர்த்து அனைத்து காவல்நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவை அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madras High Court has ordered the Tamil Nadu government to set up a special room for the identification of culprits in jails. In Next six months the special rooms should be arranged High court ordered to Tamilnadu govt.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற