தனியார் ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! இனி 12 மணிநேர வேலை? தமிழ்நாட்டில் புது ரூல்? அமைச்சர் விளக்கம்
சென்னை: தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டப்படி 12 மணி நேரம் வேலை என்றாலும் 4 நாட்கள் மட்டுமே வேலை. 3 நாட்கள் விடுப்பு கொடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில் வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான் உற்பத்தியை உயர்த்த முடியும் என்று தனியார் நிறுவனங்கள் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றன.

சமீபத்தில் கூட, தொழிலாளர்களின் வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்கவும், ஆனால் பணி நேரத்தை 12 மணி நேரத்திற்கு மேல் அதிகரிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த மாற்றங்களை ஏற்படுவதற்கு வசதியாக பணி விதி, ஊதிய விதி, அலுவலக உறவு மற்றும் பணி பாதுகாப்பு விதி, ஆரோக்கியமான பணி சூழல் விதி ஆகிய 4 விதிகளில் மாற்றம் ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது
இதை 13 மாநிலங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் சில மாநிலங்களில் ஏற்கும் முடிவில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் வரும் ஆண்டிலேயே இந்த 4 நாள் வேலை விதிமுறை அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் மற்ற மாநிலங்கள் ஒப்புகொள்ளாத காரணத்தால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதா ஒன்று சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சட்ட மசோதா:அதன்படி, தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
12 மணி நேரம் வேலை என்றாலும் 4 நாட்கள் மட்டுமே வேலை. 3 நாட்கள் விடுப்பு கொடுக்கப்படும்.
காலை 7 மணிக்கு அலுவலகம் சென்றால் மாலை 7 மணிக்கு திரும்பும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, ;

எதிர்ப்பு:இதை தற்போது திமுக கூட்டணி கட்சிகளே சட்டசபையில் எதிர்த்து உள்ளன. தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை சட்டசபையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தொழிலாளர் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், மக்களின் அடிப்படை வாழ்க்கையை இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
அமைச்சர் விளக்கம்
இந்த நிலையில் 12 மணி நேர வேலை என்பது கட்டாயமல்ல என அமைச்சர் கணேசன் விளக்கம் அளித்துளளார். ஐ.டி. நிறுவனங்கள் சில 12 மணி நேர வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. அவர்களின் சம்மதம் மற்றும் கோரிக்கை காரணமாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
மற்றபடி 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும் வேலை எனது கட்டாயம் கிடையாது. 8 மணி நேரம் வேலை பார்க்க விரும்பினால் பார்க்கலாம் என்று சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் முன் அமைச்சர் விளக்கம்அளித்துள்ளார் .












Click it and Unblock the Notifications