விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. தோட்டக்கலை ஆபிஸ் போய் பாருங்க!
கள்ளக்குறிச்சி: பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல்பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. எனவே தகுதி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்,.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கலாம்.

அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம் பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறையான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள்.
மேலும், இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்ப ட்டுள்ளது. விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வரைவோலை வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பிக்க இத்திட்ட த்தின்கீழ் தோட்டக் கலை த்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான உமா கள்ளக்குறிச்சி- 8098327732, முருகன் சின்னசேலம்- 9787863135, சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498, முருகன் ரிஷிவந்தியம்- 9688940083, சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632, முரளி திருநா வலூர்- 9976196911, சொர்ணம் தியாகதுருகம்- 8903555527, விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை- 9894142635, வாமலை வெள்ளி மலை- 9787237797 ஆகியோர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை நேரில் அணுகியும் தகவல் பெற்று பயன்பெற லாம்" இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதுமே இதேபோல் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்படும். எனவே தகுதி உள்ள விவசாயிகள் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் மேலும் விவரங்களை அறியலாம்.












Click it and Unblock the Notifications