தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1: சட்டசபையில் ஜெ., பேச்சு
சென்னை: தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலம். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் மொத்த வருவாய் மதிப்பில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மொத்த ஏற்றுமதியில் மூன்றாம் இடம் என தமிழகம் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, புதிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் பதிவு செய்வதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டார். தொழில் துறையில் நிகர மதிப்புக் கூட்டல் படி தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது என்றார்.
தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் மொத்த வருவாய் மதிப்பில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மொத்த ஏற்றுமதியில் மூன்றாம் இடம் என தமிழகம் உள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல், 2011 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த, வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகையை விட இரு மடங்கு அளவில் கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உலக முதலீட்டாளர் மாநாடு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. இதில், 2,42,160 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன.
இதில், 54 நிறுவனங்கள் மூலம் 23,258 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு பலர் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர். மற்ற நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்துவது, நிதி ஆதாரங்களைப் பெறுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவிலேயே இவைகளும் தங்கள் தொழில்களை நிறுவ நடவடிக்கைகளை எடுத்து விடும்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 31,706 கோடி ரூபாய் முதலீடுக்கு வகை செய்யயப்பட்டுள்ளது. வழி காட்டும் மையம் மூலம் 57 திட்டங்களில் 6,036 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications