திசையெங்கும் மலரும் தாமரை.. தற்போது கர்நாடகத்திலும்.. தமிழ்நாடு மட்டும் காலா தாராவி போல
Recommended Video
சென்னை: எத்தனையோ மாநிலங்களில் தட்டி கொடுத்தும், தட்டி பறித்தும் ஆட்சியை நேரடியாக பிடித்த பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான். காலா படத்தில் வரும் தாராவியை ஞாபகப்படுத்துகிறது தமிழகம். தாமரையை மலர வைக்க அமித்ஷாவால் முடியாத மாநிலமா? தமிழகம்.. இப்போது பார்த்துவிடுவோம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் மீண்டும் அமைந்துள்ள சூழலில் இப்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவும் அதன் சினேகித கட்சிகளும் ஆட்சியில் உள்ளன.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் வரிசையில் புதிதாக இப்போது தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவும் இணைந்துள்ளது. அந்த வரிசையில் விரைவில் மேற்கு வங்கமும், ஒடிசாவும், காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களிலும் இணையக்கூடும், ஏன் தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலம் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

தமிழகத்தில் வேறு
காரணம் அந்த மாநிலங்களில் பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ந்துவிட்டது. நிலையான வாக்கு வங்கியையும் பெற்றுள்ளது. ஏன் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் பாஜக குறிப்பிடத்தக்க அளவு வாக்கு வங்கியை வைத்துள்ளது. ஆனால் தமழகத்தில் வாக்கு வங்கி என்பது பாஜகவுக்கு நோட்டாவுக்கும் கீழ் என்ற நிலையே கடந்த தேர்தலுக்கு முன்பு வரை இருந்தது தான் கள எதார்த்தம்.

பாஜக வெல்லவில்லை
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மிக மோசமாக தோற்ற மாநிலம் என்றால் அது தமிழகம் தான். இங்குதான் வெற்றி வாக்கு வித்தியாசம், 3லட்சம், 4லட்சம். 5 லட்சம் என்ற அளவில் உள்ளது. இத்தனைக்கும் தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் பாஜகாவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

காலாவில் வரும் தாராவி
தற்போதை சூழலில் தமிழகத்தை பார்க்கும் போது காலா படத்தில் வரும் தாராவி தொகுதியைப் போல் தமிழகம் தெரிகிறது. அந்த படத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெற்றி பெறும் ஆளும் கட்சியால் தாராவியால் வெற்றி பெற முடியாமல் போகும். அப்படி ஒரு நிலை தான் தமிழகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமைக்கு தெரியுமா
ரஜினி படத்தில் காலாவில் வரும் தாராவியைப் போல் தான் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் மனநிலையை உருவாக்கி வருகின்றன. பாஜகவின் டெல்லி தலைமைக்கு இது தெரியுமா.. தெரியாதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தமிழகத்தில் தாமரை மலருமா
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்றால் இங்குள்ள எதிர்க்கட்சிகளை வெல்வதைவிட இங்குள்ள மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கினால் மட்டுமே அமித்ஷாவால் மட்டுமல்ல எந்த தேசிய தலைவர்களாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும்.












Click it and Unblock the Notifications