ஜில்' பீர் விற்பனை கடைக்கு ‘குடி’மகன்கள் வரவேற்பு: 10 இடங்களில் தொடங்க முடிவு
சென்னை: சென்னையில், 'ஜில்' பீர் விற்பனைக்காக, தனி கடை துவக்கப்பட்டதற்கு ‘குடி'மகன்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, கூடுதலாக, 10 இடங்களில், புதிதாக கடைகள் துவக்க, 'டாஸ்மாக்' அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர் மற்றும் மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சரிந்த விற்பனை
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பீர் விற்பனை 12 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டு 2.84 கோடி பெட்டிகள் பீர் விற்பனையானது. 2012-13ம் ஆண்டு 3.90 கோடி பெட்டிகள் பீர்கள் விற்பனை செய்யப்பட்டது. அதேசமயம் 2013-14 ம் ஆண்டு பீர் விற்பனை 3.20 கோடியாக சரிந்துள்ளது.

ஜில்பீர் கடைகள்
பீர் வகைகள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 'ஜில்' பீர் விற்பனைக்கு மட்டும், தனி கடைகள் துவக்க, முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் ஜில்பீர்
முதற்கட்டமாக, சென்னை, நுங்கம்பாக்கம், 'பார்சன் காம்பளக்ஸ்' தரைத்தளத்தில், 'ஜில்' பீர் விற்பனைக்காக, நேற்று, தனி கடை துவங்கப்பட்டது. இங்கு, ஒரே நேரத்தில், 2,520 பீர் பாட்டில்கள் வைக்கக் கூடிய கொள்ளளவு கொண்ட, ஆறு பெரிய குளிர்சாதன பெட்டிகள் மூலம், 'ஜில்' பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

ரூ.2லட்சத்திற்கு விற்பனை
நேற்று ஒரே நாளில், இந்த கடையில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீர் வகைகள் விற்பனையாகின. 'ஜில்' பீர் விற்பனைக்காக தனி கடை துவக்கப்பட்டதற்கு, 'குடி'மகன்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்தது.

10 கடைகள் திறக்க திட்டம்
சென்னை, அண்ணாசாலை, எழும்பூர், வேளச்சேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட, 10 இடங்களில், புதிய கடைகள் துவக்க, டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வாடகைக்கு இடம் தேவை
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடை வாடகைக்கு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. வாகன நிறுத்தும் வசதியுடன், மதுபான கடைகள் துவக்குவதற்கு ஏதுவான இடம் இருந்தால், அதன் உரிமையாளர்கள், சென்னை, எழும்பூர், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை அணுகலாம். அந்த இடங்களில், புதிய கடைகள் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications