தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கூல்கூல் அறிவிப்பு
தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே கோடைக்காலத்தின் உச்சபட்ச வெப்பம் தகிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.

தமிழகத்தில் பலத்த மழை
இந்த நாட்களில் வெப்பம் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்
திருச்சி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், சிவகங்கையில் 13 செ.மீ., பீளமேடு 4 செ.மீ., திண்டுக்கல் மற்றும் குன்னூரில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மக்கள் நிம்மதி
நாளை அக்னிநட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மக்கள் அஞ்சியுள்ளனர். இந்நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications