தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொடும் - ஓபிஎஸ்,ஈபிஎஸ்க்கு மோடி வாழ்த்து
துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொடும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வாழ்த்து
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்றைக்கு அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழகம் வளர்ச்சியில் வருங்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை எட்டும்
I congratulate Thiru O Panneerselvam & others who took oath today. I hope Tamil Nadu scales newer heights of progress in the years to come.
— Narendra Modi (@narendramodi) August 21, 2017
உதவிகள் செய்யும்
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
Centre assures all possible support to CM Thiru Edappadi K. Palaniswami & Dy CM Thiru O Panneerselvam for the growth of TN. @OfficeOfOPS
— Narendra Modi (@narendramodi) August 21, 2017












Click it and Unblock the Notifications