லோக்சபா தேர்தல்: 3 தொகுதிகளில் காங், மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு
திருச்சி: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு செய்துள்ளது.
அதேசமயம், காங்கிரஸுக்கும் 3 தொகுதிகளில் அது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெ்டுக்க அந்த அமைப்பின் அவசர மாநில செயற்குழு திருச்சியில் இன்று கூட்டப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் வரும் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

முதலில் அதிமுக ஆதரவு
முன்னதாக லோக்சபா தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது.

ஜெ. பேச்சால் ஆதரவு வாபஸ்
ஆனால் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசுகையில், பாஜகவை விமர்சிக்காமல் பேசி வந்ததால் அதிருப்தி அடைந்து அதிமுகவுக்கு தனது ஆதரவை தவ்ஹீத் ஜமாத் விலக்கிக் கொண்டது.

திமுகவுக்கு இன்று ஆதரவு
இந்த நிலையில் இன்று திமுக ஆதரவு நிலைப்பாட்டை அது திருச்சியில் எடுத்துள்ளது.

சில தொகுதிகளில் காங்.குக்கு ஆதரவு
செயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும், மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் திருமாவுக்கு ஆதரவு
சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசியில் புதிய தமிழகம்
தென்காசி தொகுதியில், புதிய தமிழகம் கட்சியையும் அது ஆதரிக்கிறது.

3 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவு
மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியையும் அது ஆதரிக்கவுள்ளது.

மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு
மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications