கனமழை எதிரொலி.. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலிமை குறைந்தது. இன்று மேலும் வலிமை குறைந்து இது தாழ்வு பகுதியாக மாற உள்ளது.
தற்போது சென்னைக்கு அருகே இந்த ஆழ்ந்த தாழ்வு பகுதி நிலை கொண்டு உள்ளது. இந்திய வானிலை மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எச்சரிக்கையை இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவில் இருந்து அங்கு கனமழை பெய்து வந்தது. அதிகாலையிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதனால் பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடபப்ட்டு உள்ளது. மாணவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே இருக்க வேண்டும். மழை நேரத்தில் வெளியே வர கூடாது.
மாணவர்கள் தங்களை பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது. மீறி நடத்தப்பட்டால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலிமை இழந்து, தாழ்வு பகுதியாக மாறுகிறது. மொத்தமாக வலிமை இழந்து கரையை கடக்காமல் இது காணாமல் போகும். இதனால் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications